அவிநாசி கருப்பராயர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :188 days ago
அவிநாசி; அவிநாசி அடுத்த சுண்டக்காம்பாளையத்தில் கருப்பராயர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக நம்பியாம்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். விநாயகர், அரச மரத்தடி அம்மன்,கருப்பராயர் மற்றும் துவார பாலகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின், கருவலுார் குமணன் அய்யர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. முத்தரையர் இன பெருஞ்சாதி குல அறக்கட்டளை தலைவர் பழனிச்சாமி, செயலாளர் பொன்னுச்சாமி, பொருளாளர் முருகேஷ், துணைத் தலைவர் குருசாமி, துணைச் செயலாளர் முருகன், கோவில் கமிட்டி விஜயன், கதிர்வேல், பெரியசாமி உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.