உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ராஜகணபதி கோவிலில் சங்காபிஷேக பூஜை; சிறப்பு வழிபாடு

திருப்பூர் ராஜகணபதி கோவிலில் சங்காபிஷேக பூஜை; சிறப்பு வழிபாடு

திருப்பூர்; திருப்பூர், ஜவஹர் நகர், 5வது வீதியிலுள்ள ஸ்ரீராஜகணபதி கோவிலில், 3ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா மற்றும் 108 சங்காபிஷேக பூஜை சிறப்பு வழிபாடு ஆகியன நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய நிகழ்ச்சியில், கணபதி ஹோமம், 108 சங்காபிஷேக பூஜை, மகாலட்சுமி மற்றும் நவக்கிரஹ ஹோமம் ஆகியன நடந்தது. முன்னதாக, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து மகாபிஷேகம், சிறப்பு அலங்காரம், வழிபாடு, மஹா தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி, கோவில் கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !