திருப்பரங்குன்றம் கோயிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த மனு
ADDED :79 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ் பேரவை நிர்வாகிகள் கோயில் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் ரஞ்சனியிடம் நேற்று மனு கொடுத்தனர். நிர்வாகிகள் கூறுகையில், கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்தில் கோயிலில் எத்தனை கோபுர கலசங்களில் எத்தனை சிவாசாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்துகிறார்களோ அத்தனை இடத்திலும் தமிழிலும், தமிழர்களும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம் என்றனர்.