கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி கிருத்திகை; சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :425 days ago
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 01 ல் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் முருகப்பெருமான் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வள்ளி தேவசேனா சமேதரராக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.