திருமலையில் பக்தர்களுக்காக அரசு பஸ்கள்; இலவச சேவை
ADDED :192 days ago
திருப்பதி; திருமலையைப் பொறுத்தவரை தர்மரத வாகனம் என்று சொல்லப்படக்கூடிய தேவஸ்தானத்திற்கு சொந்தமான பஸ்கள் எல்லா இடங்களிலும் நின்று பக்தர்களை இலவசமாக ஏற்றிச் செல்லும்.இந்த பஸ்களின் எண்ணிக்கை என்பது குறைவாக இருப்பதால் கூடுதலாக பஸ்வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.அதன் அடிப்படையில் இப்போது அரசுக்கு சொந்தமான 80 பஸ்கள் விடப்பட்டுள்ளன.இதன் காரணமாக எட்டு நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு நிலையத்திற்கு பஸ்கள் வந்த நிலையில் இப்போது 2 நிமிடத்திற்கு ஒரு பஸ் வருகிறது.இந்த பஸ்களில் திருமலைக்கு ஏறி இறங்கினால் அதற்கு கட்டணமில்லை அதே பஸ் திருமலையில் இருந்து மலைப்பாதையில் திருப்பதிக்கு இறங்கும் போது அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும்.,மேற்கண்ட தகவலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலர் சி.வேங்கையா செளதரி தெரிவித்துள்ளார்.