உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி திரவுபதி கோவிலில் திருவிளக்கு பூஜை

உலக நன்மை வேண்டி திரவுபதி கோவிலில் திருவிளக்கு பூஜை

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த திருவதிகை திரவுபதி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.  உலக நன்மை பெற வேண்டி பண்ருட்டி அடுத்த திருவதிகை திரவுபதி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவையொட்டி உற்சவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் 108 பெண்கள் வாழை இலையில் பச்சை அரிசியிட்டு விளக்கேற்றி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !