உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீப ஒளியில் ஜொலித்த மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர்; பக்தர்கள் வழிபாடு

தீப ஒளியில் ஜொலித்த மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர்; பக்தர்கள் வழிபாடு

கோவை; ஆனி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவலிங்கம் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில் மலை மேல் அமர்ந்திருக்கும் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீப ஒளியில் ஜொலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபொல் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் கம்பீர விநாயகர் கோவிலில் அமைந்துள்ள   புவனேஸ்வரர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !