லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
ADDED :4740 days ago
நெட்டப்பாக்கம்: மடுகரை லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் மார்கழி மாத முதல் நாளையொட்டி, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மடுகரை குரு நகரில் உள்ள லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் மார்கழி மாதம் முதல் நாளையொட்டி மூலவர் மற்றும் தாயாருக்கும் தைலக்காப்பிட்டு, மலர் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், சந்தனம், கரும்பு, தேன், இளநீர், எலுமிச்சை, பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனமும், ராமநுஜதாசன் குழுவினரின் உபன்யாசமும் நடந்தது. ஏற்பாடுகளை நித்தியகல்யாணி, ரோகிணி, ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.