குள்ளனம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை நட்சத்திர பூஜை
ADDED :126 days ago
திண்டுக்கல்; நாகல்நகர் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியப்பட்ட குள்ளனம்பட்டி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு பின் நடந்த முதல் கார்த்திகை நட்சத்திர பூஜையை முன்னிட்டு சுவாமி பாலதண்டாயுதபாணி பழநி ராஜ அலங்கார முருகன் அலங்காரத்திலும், ஸ்ரீஅமிர்த ஸ்வர்ண லிங்கேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில், இதர மூலவர்கள் சந்தனகாப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர். பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சவுராஷ்டிர சபை தலைவர் அருள்ஜோதி, செயலர் சாந்திலால், டிரஸ்டி கண்ணன், ஸ்ரீசிவபாலாஜி ஸ்டீல்ஸ் அதிபர் சுப்பிரமணியன் , பாலவிக்னா ஸ்விங் மில்ஸ் உரிமையாளர் பிரபுசிவா செய்திருந்தனர்.