தணிகாசலம்மன் கோவிலில் சொர்ண வாராஹி அம்மனுக்கு நவராத்திரி விழா
ADDED :141 days ago
திருத்தணி; தணிகாசலம்மன் கோவிலில் உள்ள சொர்ண வாராஹி அம்மனுக்கு நவராத்திரி விழா மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவில் வளாகத்தில் சொர்ண வாராஹி அம்மன் சன்னிதி உள்ளது. கடந்த 26ம் தேதி துவங்கிய நவராத்திரி விழா வரும் 4ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை, 6:00 மணிக்கு சொர்ண வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடக்கிறது. நேற்று, காலையில் வாராஹி அம்மனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை ஹிந்து அறநிலை துறை ஆய்வாளர் மற்றும் கோவில் குருக்கள் செய்து வருகின்றனர்.