உடுமலை திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED :141 days ago
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக ஏழாம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. ஸ்ரீ விஷ்வக்சேனர், லட்சுமி ஹயக்கிரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீ ரேணுகாதேவி தாயார் திருமஞ்சனம் மற்றும் ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, ஆண்டு விழா, சிறப்பு ஹோமம், நவகலச ஸ்தாபிதம், மூலவர் வேங்கடேசபெருமாள் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் வேங்கடேச பெருமாள் எழுந்தருளி,பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, ஸ்ரீ தேவி பூதேவி சமேத பெருமாள் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.