செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் விமரிசை
ADDED :114 days ago
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையின் வடக்கு பகுதியில் செப்பறை அழகியகூத்தர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆனி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித் திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகள், சுவாமி வீதி உலா நடந்து வந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து வழிபாடு செய்தனர். தேர் நான்கு ரதவீதிகளை வலம்வந்து நிலையை அடைந்தது.