நவதான்ய அலங்காரத்தில் சொர்ண வராஹி அம்மன் அருள்பாலிப்பு
ADDED :113 days ago
திப்போரூர்; திருப்போரூர் ஸ்ரீ சொர்ண வராஹி அம்மன் கோவிலில் நடந்த ஆஷா நவராத்திரி விழாவில் நவதான்ய அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்போரூர் பேரூாரட்சி, 11வது வார்டு, கன்னியம்மன் கோவில் தெருவில், ஸ்ரீ சொர்ண வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. நவராத்திரி விழாவை யொட்டி, தினசரி மூலவர் வராஹி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை, சகஸ்ர நாம பாராயணத்துடன் நடந்து வருகிறது. இன்று நடந்த விழாவில் காலை 8:00 மணிக்குமேல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், யாக பூஜை நடந்தது. தொடர்ந்து நவதான்ய அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.