திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜை
                              ADDED :117 days ago 
                            
                          
                          
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக நேற்று பூர்வாங்க பூஜை நடந்தது. பூர்வாங்க பூஜை: மாலை 6:30 மணிக்கு திருவாட்சி மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் புனித நீர் அடங்கிய குடம் அலங்கரித்து வைக்கப்பட்டது. மங்களை இசையுடன் துவங்கி யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை முடிந்து புனித நீர் தெளித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு அனுமதி பெறுதல் முடிந்து அனைத்து மூலவர்களுக்கும் பூஜை, தீபாராதனை முடிந்து அனுமதி பெறப்பட்டது. திருமுறை பாராயணம் முடிந்து தீபாராதனை நடந்தது. ஜூலை 10 முதல் யாக சாலை பூஜை துவங்குகிறது.