உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவிலில் அன்னதான நிகழ்ச்சி!

ஐயப்பன் கோவிலில் அன்னதான நிகழ்ச்சி!

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் வண்ணான்குளக்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் அன்னதான விழா நடந்தது.விழாவையொட்டி காலை 7 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மதியம் 1 மணிக்கு குருசாமிகள் செல்வம், பாலு தலைமையில் ஐயப்ப சுவாமிக்கு படி பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பஜனை பாடல்களை ஐயப்ப பக்தர்கள் பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !