திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் குருபூஜை
ADDED :204 days ago
திருவண்ணாமலை; ஆனி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் குருபூஜை விழா, இரண்டாம் ஆண்டு விழா திருவண்ணாமலை கிரிவலப் பாதை உள்ள அருணகிரிநாதரின் மணிமண்டபத்தில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு பல்வேறு பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருப்புகழ் பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.