உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி, 11ம் தேதி காலை 8:00 மணிக்கு மகா சுதர்சன ஹோமம் நடந்தது. பின், வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. யாகசாலை பூஜை, அபிஷேகங்களை கோவில் பட்டாச்சாரியார் மாலோன் தலைமையில் செய்தனர். விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !