ஆனி கடைசி செவ்வாய்; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :453 days ago
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் முருகப்பெருமான், உற்சவர் முருகனுக்கும் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் உற்சவர் முருகன் வள்ளி தேவ சேனா சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.