உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு வட்டார கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு

கிணத்துக்கடவு வட்டார கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்று வட்டார கோவில்களில் ஆடி மாத சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம், மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் துவங்கியுள்ளது. இதில், ஆடி வெள்ளியை யொட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பலர் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர். இதே போன்று பொன்மலை (கனக கிரி) வேலாயுத சுவாமி கோவிலில் விசாலாட்சி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !