சவேரியார் சர்ச்சில் கிறிஸ்துமஸ் தாத்தா!
ADDED :4708 days ago
விருதுநகர்: பாண்டியன் நகர் சவேரியார் சர்ச்சில் நடந்த கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சியில், கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப்பொருட்களை வழங்கினார். இதை, பாதிரியார்கள் ஐ.எஸ்.ஜேசுராஜ், ஏ.எட்வர்ட், டி.அமிர்தராஜன் ஜெபத்துடன் துவக்கி வைத்தனர். பாண்டியன் நகர் பகுதி கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு சென்று இயேசு பிறந்த நற்செய்தியினை தெரிவித்தனர். இதில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா ஆடல், பாடலுடன் பரிசுப்பொருட்களை வழங்கினார். பாலன் நகர், ரயில்வே பீடர் ரோடு, புதுத்தெரு, முத்தால் நகர், ஜக்கம்மாள்புரம், அண்ணா நகர்,சவேரியார் நகர், காந்திநகர், மல்லாங்கிணர் சூரம்பட்டி மறு வாழ்வு முகாம் பகுதிகளுக்கும் சென்றார்.