உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குரு பூஜை

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குரு பூஜை

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை விழா நடந்தது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் இன்று காலை 9:30 மணிக்கு நடராஜர் சன்னதி முன்பாக யாகசாலை பூஜைகளை சிவாச்சார்யர்கள் துவக்கினர். தொடர்ந்து காலை 10:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்து 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள் முன்னிலையில் தீபாராதனை நடந்தது. ஆ.பி.சீ.அ.கல்வியியல் கல்லூரி செயலர் ராமேஸ்வரன் பங்கேற்றார். தொடர்ந்து திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் பிரகார வலம் வந்தனர். ஓதுவார் மாசிலாமணி தேவாரம் திருமுறைகள் பாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !