உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் பவித்ரோத்சவ விழா; சாஸ்திராதிக அங்குரார்ப்பணம்

திருப்பதியில் பவித்ரோத்சவ விழா; சாஸ்திராதிக அங்குரார்ப்பணம்

திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீவாரி கோயிலில் பவித்ரோத்சவத்திற்கான சாஸ்திராதிக அங்குரார்ப்பணம் நடைபெற்றது. முதலில், மாலையில், சேனாதிபதி கோயிலின் மாடவீதி வழியாக சுவாமி வசந்தமண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஆஸ்தானம் செய்யப்பட்டது. அதன் பிறகு, கோயிலின் பவித்ரோத்சவத்தில் அங்குரார்ப்பணத்தின் வேத சடங்குகள் செய்யப்பட்டன. நிகழ்சசியிங் திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்ரி பங்கேற்றார். இன்று ஆகஸ்ட் 5 முதல் 7 வரை ஸ்ரீவாரி கோயிலில் பவித்ரோத்சவம் நடைபெறும். 


ஆண்டு முழுவதும் கோயிலில் நடைபெறும் அர்ச்சனைகள் மற்றும் திருவிழாக்களின் போது, யாத்ரீகர்கள் அல்லது ஊழியர்களால் அறியப்படாமலேயே சில தவறுகள் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக, கோயிலின் புனிதத்தன்மைக்கு எந்தக் கறையும் ஏற்படாமல் ஆகம சாஸ்திரத்தின்படி பவித்ரோத்சவங்கள் நடத்தப்படுகின்றன. 15-16 ஆம் நூற்றாண்டுகள் வரை திருமலையில் பவித்ரோத்சவங்கள் நடத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. 1962 ஆம் ஆண்டு முதல் கோயில் இந்த விழாக்களை மீண்டும் தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !