உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் வாகனத்தில் ராமாவதாரத்தில் உலா வந்த சுந்தரராஜ பெருமாள்

அனுமன் வாகனத்தில் ராமாவதாரத்தில் உலா வந்த சுந்தரராஜ பெருமாள்

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் அனுமந்த வாகனத்தில் ராம அவதாரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. தினமும் அன்னம், சிம்மம், சேஷ, கருட வாகனத்தில் அருள் பாலித்த நிலையில், நேற்று அனுமந்த வாகனத்தில் ராம அவதாரத்தில் எழுந்தருளினார். இன்று இரவு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !