உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்தாலே முக்தி தரும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

நினைத்தாலே முக்தி தரும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.


நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆடி வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய நந்தி, உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பிரதோஷ அபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !