ஹரிதாள, விபத்ரா கவுரி விரதம்; சிவ சக்தி வழிபாடு சந்தோஷ வாழ்வு தரும்!
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை வழிபட சிறப்பான வாழ்வு அமையும். ஆவணி வளர்பிறை திருதியில் அம்மனை வேண்டி இந்த வழிபாடு நடைபெறுகிறது. பெண்கள் பார்வதியுடன் அமர்ந்திருக்கும் சிவன் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
ஆவணி வளர்பிறை திருதியை அன்று சக்தி தேவியை வணங்கி இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. திருமணம் நடைபெற வேண்டிய கன்னிப் பெண்கள், செவ்வாய்க்கிழமை மாலையில் தனது வீட்டில் விருஷபத்தின் மீது பார்வதியுடன் அமர்ந்திருக்கும் சிவன் படத்தை வைத்து பூஜை செய்து சிவ மந்திரம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து நிவேதனம் செய்து அம்மனை பூஜிக்க வேண்டும். இவ்வாறு விரதம் இருந்து வழிபட பெண்கள் விரும்பும் வாழ்பு அமைந்து, சந்தோஷமாக வாழ்வார்கள் என்கிறது சாஸ்திரம்.