உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 100 கிலோ வெட்டி வேரில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை

100 கிலோ வெட்டி வேரில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை

கோவை; விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்ஒரு பகுதியாக, கோவையின் பி.என். போதார் முல்லை நகரில் 12 அடி உயரம் கொண்ட பசுமை விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முயற்சியை சத்திரபதி சிவாஜி டிரஸ்ட், உயிர்தளிர் அறக்கட்டளை, மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து, இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்களிப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். மருதமலை ரோடு முல்லை நகரில் 100 கிலோ வெட்டி வேர் கொண்டு தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை அனைவரையும் கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !