பகவதி அம்மன் கோவிலில் கொலு வடிவில் அமைத்துள்ள விநாயகர் சிலைகள்
பாலக்காடு; விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கக்கோட்டு பகவதி அம்மன் கோவிலில் பொம்மை கொலு வடிவில் அமைத்த விநாயகர் சிலைகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு பிராயிரி அருகே உள்ளது கக்கோட்டு பகவதி அம்மன் கோவிலில். இங்கு எல்லா ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் நவராத்திரி பண்டிகைக்கு பொம்மை கொலு அமைக்கும் வடிவில் 30 விநாயகர் சிலைகள் வைத்துள்ளது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர். அரை அடி முதல் ஒன்றரை அடி வரையில் உயரம் உள்ள விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழகத்தில் இருந்து கொண்டுவந்தவை. இன்று விளக்கு பூஜை நடந்தது. நாளை காலை 8:00 மணிக்கு கஜ பூஜை, யானைகளுக்கு உணவளிக்கும் "யானையூட்டு நிகழ்வு, மாலை 4:00 மணிக்கு யானைகள் அணிவகுப்பு, 5:00 மணிக்கு துவங்கும் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் ஆனிக்கோடு அஞ்சு மூர்த்தி கோவில் அருகே நிறைவு பெறுகிறது. தொடர்ந்து பகுதியில் உள்ள ஆற்றில் விநாயகர் சிலைகள் விசரஜனம் செய்யப்படும்.