பழநி முருகன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :200 days ago
பழநி; பழநி முருகன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பழநி கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பழநி முருகன் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அங்கு உள்ள 18 சித்தர்கள் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, பட்டத்து விநாயகர் கோயில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.