சென்னை பார்த்தசாரதி கோயிலில் தமிழக முதல்வர் தரிசனம்!
ADDED :4679 days ago
சென்னை: வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏகாதசியை முன்னிட்டு, கோவிலில் இலவசமாக லட்டு மற்றும் பிரசாதம், கோவில் வழிகளை விளக்க தகவல் மையம், மருத்துவ முதலுதவி, தீயணைப்பு, குடிநீர், பேருந்து வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் தரிசனம்: வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சென்னை பார்த்தசாரதி கோயிலில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்ட நான்கு பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.