உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹெத்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பாரம்பரிய உடையுடன் பக்தர்கள் பங்கேற்பு

ஹெத்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பாரம்பரிய உடையுடன் பக்தர்கள் பங்கேற்பு

கோத்தகிரி; கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில் நடந்த ஹெத்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோத்தகிரி அருகே உள்ள ஒன்னதலை பழமை வாய்ந்த ஹெத்தையம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. தொடர்ந்து, மீண்டும் வர்ணம் பூசப்பட்டு கோவில் புனரமைக்கப்பட்டு, இன்று காலை, 9:00 மணிக்கு கும்பாபிேஷக விழா துவங்கியது. தொடர்ந்து, ஹெத்தையம்மன் மற்றும் ஹிரியோடைய்யா கோவில் கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் பூசாரிகள் சிவன் மற்றும் போஜன் ஆகியோர், செங்கோல் பக்தர்கள் உட்பட, கிராம மக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தினர். பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டதுடன், அம்மன் மற்றும் ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. காலை, 11:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஒன்னதலை சுற்றுவட்டார கிராம தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கவுரவிக்கப்பட்டனர். மக்கள் அனைவரும் காணிக்கை செலுத்தி வழிபட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !