உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

சிவகங்கை; தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். கடந்த 2024 ஆக.22ஆம் தேதி கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்று வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் பால்,பன்னீர், சந்தனம்,நெய், இளநீர்,திரவியம், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !