கோரிப்பாளையம் தர்ஹா சந்தனக்கூடு
ADDED :89 days ago
மதுரை: மதுரை கோரிப்பாளையம் குத்புல் ஹஜ்ரத் காஜா சையது சுல்தான் அலாவுதீன் தர்ஹா மதநல்லிணக்க உரூஸ் எனும் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நேற்று அதிகாலை நடந்தது. இரவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
தர்ஹா மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜாதி, மத பேதமின்றி பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரவு தொடர் இசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை தர்ஹா நிர்வாகிகள் செய்திருந்தனர்.