திருக்கோவிலூரில் 15 ம் நூற்றாண்டு வாணாதராயர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாணாதராயர் கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன் தலைமையிலான குழுவினர்கள், திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதிக்கு முன்பாக உள்ள சிம்ம மண்டபத்தின் கீழ் தாண்டவ வாணாதராயர் தன்மம் என பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இது குறுநில மன்னரான வாணாதிராயர் இப்பகுதியை ஆட்சி செய்த போது இதனை கட்டி இருக்கலாம். இக்கோவிலில் மொத்தம் 15 கல்வெட்டுகள் உள்ளதாக அரசுப்பதிவில் உள்ளது. சோழர், பாண்டியர், பல்லவர், விஜயநகர பேரரசு, இராட்டிரகூடர் கல்வெட்டுகளின் வரிசையில், முதன் முறையாக வாணாதராயர் கல்வெட்டு இப்பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டிருப்பது சிறப்பாகும் என கல்வெட்டு ஆர்வலர் ஆகியோர் கூறினார்.