பழநி கோயிலில் ரூ.75 லட்சம் வசூல்!
ADDED :4677 days ago
பழநி: பழநி கோயிலில் தரிசன, அபிஷேக, அர்ச்சனை டிக்கெட்டுகள் விற்பனை மூலம், இரண்டு நாட்களில், 75 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. சில நாட்களாக, பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்களும், சபரிமலை செல்லும் பக்தர்களும் அதிக அளவில் பழநிக்கு வருகிறார்கள். அவர்கள் சுவாமி தரிசனதிற்கு 5 மணி நேரம் காத்திருக்கின்றனர். மலைகோயில் மற்றும் கிரிவீதிகளில் உள்ள ஸ்டால்களில் பஞ்சாமிர்த விற்பனை, தரிசன, தங்கரத, அர்ச்சனை, அபிஷேக, ரோப்கார், வின்ச், முடிக்காணிக்கை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் கடந்த இரண்டு நாட்களில் ரூபாய் 75 லட்சம் வசூலாகியுள்ளது. உண்டியல் காணிக்கை இதில் சேராது.