உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு; ரெங்கநாதருக்கு சிறப்பு பூஜை

ஸ்ரீரங்கம் சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு; ரெங்கநாதருக்கு சிறப்பு பூஜை

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார். தொடர்ந்து, மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பாடு நடைபெற்றது.


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆவணியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவில் நம்பெருமாள் திருமஞ்சனம், அமுது கண்டருளுளினார். விழாவில் நேற்று காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்று, சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார். தொடர்ந்து மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு அம்மாமண்டபம் சாலையில் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்தார். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !