கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை
ADDED :201 days ago
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு, சித்தி விநாயகர், காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரியையொட்டி தினமும் சிறப்பு பூஜை நடபெற்று வருகிறது. அதனையொட்டி, விநாயகர் மற்றும் காமாட்சி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகமும், அம்மனுக்கு பட்டுப்புடவை உடுத்தி, சர்வ அலங்காரம் செய்யப்படுகிறது. லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து குங்கும அர்ச்சனை செய்தபின், மந்திர உபசார பூஜை நடந்தது. நவராத்திரி அம்மன் பூஜை மகிமை குறித்து ராஜி பட்டாச்சாரியார் பக்தர்களுக்கு விளக்கினார். பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வேலு செய்திருந்தார்.