உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி அனுஷம்; காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி அனுஷம்; காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் புரட்டாசி அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மாதந்தோறும் நடக்கும் இந்த நிகழ்வானது  வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் உள்ள மகா சங்கரா மினி ஹாலில் நடந்தது. இதில் மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. விழாவில்சர்வ அலங்காரத்தில்  காஞ்சி மகா பெரியவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !