உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மனுக்கு தீபாவளியன்று வைர கிரீடம், தங்கக் கவசம் சாற்றி வழிபாடு

மதுரை மீனாட்சி அம்மனுக்கு தீபாவளியன்று வைர கிரீடம், தங்கக் கவசம் சாற்றி வழிபாடு

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஐப்பசி மாத திருவிழாவில் அக்.20 தீபாவளியன்று அம்மனுக்கு வைர கிரீடம், தங்கக்கவசம், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்படுகிறது.அக். 22 முதல் 27 வரை கோலாட்ட உற்ஸவம் நடக்கிறது. அக். 22 முதல் 25 வரை மாலை 6:00 மணிக்கு ஆடி வீதியில் அம்மன் எழுந்தருளி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்திய பின் கொலுச்சாவடி சேத்தியாவார். அக். 26 மாலை 6:00 மணிக்கு அம்மன் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா வருவார். அக். 27 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி, ஆடி வீதியில் புறப்பாடு நடைபெறும். கந்தசஷ்டி விழா அக். 22 முதல் 27 வரை கந்தசஷ்டி விழா நடைபெறும். அக். 28 காலை 7:00 மணிக்கு கூடல்குமாரர் சன்னதியில், முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி, அவருக்கு வெள்ளிக் கவசம், பாவாடை சாத்துப்படியும் விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடைபெறும். நவ. 1 முதல் 5 வரை திரு பவித்ர உற்ஸவத்தை முன்னிட்டு சந்திரசேகரர் சுவாமி, சன்னதி 2ம் பிரகாரம் வலம்வந்து சேத்தியாவார். நவ. 5 உச்சிக்காலத்தில் சொக்கலிங்கப் பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஐப்பசி பூரம் நவ. 14 ஐப்பசி மாத பூரத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு மீனாட்சி அம்மன் மூலவர் மற்றும் உற்ஸவரை ஏத்தி இறக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடக்கும். உச்சிக்காலத்தில் ஆலவட்டத்துடன் உற்ஸவர் அம்மன் சேத்திவந்து சேர்வார். ஏற்பாடுகளை கோயில் இணைகமிஷனர் சுரேஷ் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !