உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா : பெண்கள் மதுக்கலயம் ஏந்தி ஊர்வலம்

ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா : பெண்கள் மதுக்கலயம் ஏந்தி ஊர்வலம்

மேலூர்; வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் பெண் பக்தர்கள் மதுக்கலயம் ஏந்தியும், பதுமைகளை சுமந்தும், வைக்கோல் பிரி சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.இத் திருவிழாவையொட்டி 60 கிராமங்களில் உள்ள ஏழு பிரிவுகளை சேர்ந்த ஏழு குழந்தைகளை செப்.16 அம்மனாக தேர்வு செய்யப்பட்டு வெள்ளலூரில் உள்ள கோயில் குடியிருப்பு வீட்டில் 15 நாட்கள் தங்கி இருந்தனர். நேற்று கோயில் குடியிருப்பு வீட்டில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் கோவில்பட்டியில் உள்ள ஏழைகாத்தம்மன் கோயிலுக்கு அம்பலக்காரர்கள் தலைமையில் 7 குழந்தைகள் மாலை மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டனர். அதற்கு முன்பாக பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டியவர்கள் உடலில் வைகோல்பிரி சுற்றியும், குழந்தை வரம் கிடைக்கப்பெற்றவர்கள் ஏழைகாத்தம்மன் சிலை ஏந்தியும், சிறுவர்கள் பூக்கொடைகளை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று தேரோட்டமும், அக். 2 மஞ்சள் நீராட்டும், அக்.7 கோயில் முன் உள்ள குளத்தில் பெரிய மது கரைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !