உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடஹர மகாகணபதி கோவிலில் விதுஷேகர பாரதி மஹாஸ்வாமி விஷேச பூஜை

சங்கடஹர மகாகணபதி கோவிலில் விதுஷேகர பாரதி மஹாஸ்வாமி விஷேச பூஜை

சிக்மகளூர்;  கர்நாடகா, சிக்மகளூர் சங்கடஹர மகாகணபதி கோவிலில் சிருங்கேரி விதுஷேகர பாரதி மஹாஸ்வாமி விஷேச பூஜைகள் செய்து வழிபட்டார்.


ஆதி சங்கரர் தோற்றுவித்த நான்கு பீடங்களில் முதன்மையானது சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம். இப்பீடத்தின் 36வது பீடாதிபதியாக விளங்கும் பாரதீ தீர்த்த சுவாமிகள் தனது சீடராக ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளை 2015ம் ஆண்டு நியமித்தார். விதுஷேகர பாரதி மஹாஸ்வாமி சிருங்கேரி சாரதா பீடத்தின் 37வது பீடாதிபதியாக உள்ளார். சிருங்கேரி சாரதா பீடம் மற்றும் பிற கோவில்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் ஹோமங்களில் பங்கு பெற்று வரும் இவர் நேற்று 6ம் தேதி சிக்மகளூர் சங்கடஹர மகாகணபதி கோவிலில் லோக கல்யாணத்திற்கான புனஹ் பிரதிஷ்டை கும்பாபிஷேக மற்றும் விஷேச பூஜைகளை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !