நத்தம் அருகே குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் உழவாரப்பணி
ADDED :46 days ago
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் உழவார பணிகள் நடந்தது. இதில் கோவிலில் உள்ள அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் சன்னதி மற்றும் விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, நாகம்மாள், நந்திபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கிடந்த குப்பைகள் அகற்றபட்டு கோவில் பிரகாரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றபட்டது.இந்த பணியில் நத்தம் சிவனடியார்கள் கூட்டமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.