மெனசானதொட்டி ஆஞ்சநேயர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3 hours ago
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அத்திமுகம் அருகிலுள்ள மெனசானதொட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆஞ்சநேய சுவாமி கோவில், புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட முனீஸ்வரர் சுவாமி, கங்கம்மா சுவாமி மற்றும் மாரியம்மன் ஆகிய உற்சவர் தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவுக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.