உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவம்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவம்

கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.


முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் இந்தாண்டு கந்த சஷ்டி விழா, கடந்த 22ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை, 3:00 மணிக்கு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குவிந்தவர். பரவசத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !