உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை; கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை; கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

திருத்தணி: முருகன் கோவில்களில் நேற்று நடந்த திருக்கல்யாண விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில், காலை 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவர் முருகர், வள்ளி – தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், அறக்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கொட்டும் மழையிலும் முருகன் மலைக்கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், பொது வழியில், இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலை வள்ளி – தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பொன்னேரி பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா ஏழு நாட்கள் நடந்தது. கடந்த 21ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. நேற்று வள்ளி – தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. பொன்னேரி, ஆண்டார்குப்பம், பெரும்பேடு, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவள்ளூர் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, வள்ளி – தெய்வானை, சுப்ரமணியர் திருக்கல்யாணம் நடந்தது. அதேபோல் பூங்காநகர், சிவ விஷ்ணு கோவில், பெரியகுப்பம் வள்ளல் விநாயகர் ஆகிய கோவில்களில், வள்ளி –தெய்வானை, சுப்ரமணியர் திருக்கல்யாணம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காலை 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !