உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது ஏன்?

சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது ஏன்?

அம்மாவின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. உணவும், மன உணர்வும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. உணவே நம்  மன உணர்வாக மாறுகிறது.  மற்றவர் கொடுத்ததை சாப்பிடும் போது சிலர், ‘இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு’ என சொல்வதுண்டு. ‘அன்னையோடு அறுசுவை உண்டி போம்’ என  அம்மாவின் அருமையைச் சொல்கிறார் பட்டினத்தார். இதனடிப்படையில் அம்மையப்பராக வீற்றிருந்து உலகைக் காக்கும் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று உச்சிக்கால பூஜையின் போது இதை நடத்துவர். ‘அன்னம் பரப்பிரம்ம சொரூபம்’ என சோற்றை கடவுளின் வடிவமாகப் போற்றுவர்.  


ஐப்பசி பவுர்ணமி சிவனுக்குரிய நல்ல நாள். இந்த நாளில் நடத்தப்படும் அன்னாபிஷேகத்தை தரிசிப்பவருக்கு வாழ்வில் உணவுக்கு குறை ஏற்படாது. அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடக்கும். திருச்சியிலிருந்து 110 கி.மீ., துாரத்தில் உள்ள இங்கு மூலவர் சிவலிங்கம் பதிமூன்றரை அடி உயரம் கொண்டது. இதற்கு அபிஷேகம் செய்ய நுாறு மூடை அரிசியை சமைப்பர். சோழர் காலத்தில்  நடந்த இந்த அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்தது. தற்போது காஞ்சிப்பெரியவரின் வழிகாட்டுதலால் தொடங்கப்பட்டது. காலையில் தொடங்கும் அபிஷேகம் மாலை வரை நடக்கும். மூலவரை முழுமையாக அன்னத்தால் அலங்கரிப்பர். அப்போது, சுவாமியின் மீது இருக்கும் ஒவ்வொரு சோற்றிலும் சிவலிங்கம் இருப்பதாக கருதி வழிபடுவர். ..............


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !