உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

அவிநாசி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

அவிநாசி, அவிநாசி பாரதிதாசன் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவிலில் இன்று திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து திருவிளக்கு, ஆனைமுகன்,திருமுகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றது. இன்று இரண்டாம் கால வேள்வி பூஜையில் திருப்பள்ளியெழுச்சி, மூல மூர்த்திகளுக்கு காப்பணிவித்தல், திருமுறை விண்ணப்பம்,திருக் குடங்கள் புறப்பட்டு மூலவர் விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஸ்ரீ வெற்றி விநாயகர் அறக்கட்டளையினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !