உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜராஜ சோழன் கால கோவிலில் புதையல்; திருப்பணியின் போது குவியல், குவியலாக தங்க காசு

ராஜராஜ சோழன் கால கோவிலில் புதையல்; திருப்பணியின் போது குவியல், குவியலாக தங்க காசு

திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட திருமூலநாதர் சிவன் கோவில் சிதிலமடைந்து காணப்படும் நிலையில், அறநிலையத்துறை சார்பில் புனரமைத்து கட்டும் பணி தொடங்கியுள்ளது. அதற்கான பணியில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். கருவறை அரு‍கே பள்ளம் தோண்டியபோது, குவியல், குவியலாக தங்க காசு தென்பட்டது. இதுகுறித்து, வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்க நாணயங்களின் மீதிருந்த மண்ணை அகற்றி, துாய்மைப்படுத்தி எண்ணியபோது, 103 தங்க நாணயம் கிடைத்தது. தங்க காசுகளை கைப்பற்றி, எந்த மன்னர் ஆட்சி காலத்து நாணயம் என, ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !