உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லப்பாளையம் பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

எல்லப்பாளையம் பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

அன்னூர்; எல்லப்பாளையம், பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.


எல்லப்பாளையத்தில் பழமையான பழனியாண்டவர் கோவிிலில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் ஆகியோருக்கு புதிய கற்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. கொடிமரம் அமைக்கப்பட்டு, விநாயகர், சண்டிகேஸ்வரர் திருமேனிகள் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா 31ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. கடந்த 1ம் தேதி இரவு முதற்கால வேள்வி பூஜை நடந்தது. 2ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், கோபுர கலசம் வைத்தலும் நடந்தது. இரவு வாகை ஸ்ரீ வேல் கலைக்குழுவின் காவடியாட்டமும் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு, பழனி ஆண்டவர், திருச்சுற்று தெய்வங்கள், கோபுரம் ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, மகா அபிஷேகமும், தச தரிசனமும் நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பழனி சாது சண்முக அடிகள் ஆகியோர் அருளுரை வழங்கினர். அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடந்தது. காலை முதல் மதியம் வரை அன்னதானம் வழங்கப்பட்டது. 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மண்டல பூஜை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !