உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம் : கார்த்திகை ராசி பலன்

மிதுனம் : கார்த்திகை ராசி பலன்

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்

விவேகமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு, கார்த்திகை யோகமான மாதமாகும். டிச. 6 வரை தைரிய, வீரிய காரகனான செவ்வாய் சத்ரு, ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன்னிப்போம் மறப்போம் என்று எதிரிக்கு கருணைக்காட்டிய நிலை மாறும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உடல் பாதிப்பு விலகும். நீண்ட நாள் கனவுகள் இந்த மாதத்தில் நனவாகும். நவ. 27 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகி நிம்மதி ஏற்படும். டிச. 6 முதல் ராசிநாதன் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு இருந்த நெருக்கடி விலகும்.

சந்திராஷ்டமம்: நவ. 25, 26.

அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14.

பரிகாரம் நன்மை தருவாரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


திருவாதிரை

நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், சனியும் சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களைத் தேடி வரும். கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபம் தரும்.  தன்னம்பிக்கை அதிகரிக்கும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலை மாறும். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டவர்களும் தேடி வந்து சமாதானம் பேசுவர். என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.  தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். ரியல் எஸ்டேட், உணவகம், மருந்து, கெமிக்கல், டிரான்ஸ்போர்ட், செங்கல், விவசாய உற்பத்தி பொருட்கள் வியாபாரம் முன்னேற்றம் பெறும்.  வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு மருந்து மாத்திரை என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். ராசிநாதன் புதன் டிச. 6 முதல் முன்னேற்றத்தை தருவார். பொருளாதார நிலையை உயர்த்துவார். நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றுவார். நெருக்கடியில் இருந்து விடுவிப்பார். உறவினர் மத்தியில் செல்வாக்காக நடைபோட வைப்பார். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறையை உண்டாக்குவார்.

சந்திராஷ்டமம்: நவ. 26, 27

அதிர்ஷ்ட நாள்: நவ. 22, 23. டிச. 4, 5, 13, 14

பரிகாரம் காளியை வழிபட வாழ்வில் இருந்த சங்கடம் விலகும்.


புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்

அறிவாற்றலும் பிறருக்கு வழிகாட்டும் திறனும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை நன்மையான மாதமாகும். குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு நவ.18 முதல் வக்கிரம் அடைவதால் இதற்கு முன் அவர் சஞ்சரித்த உங்கள் ராசிக்குரிய பலன்களையே இப்போது வழங்குவார். ஒரு பக்கம் உழைப்பு, மறு பக்கம் வருமானம் என்ற நிலை ஏற்படும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நன்மை உண்டாகும். கணவர், மனைவிக்குள் இருந்த விரிசல் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும் வகையில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மாதம் முழுவதும் உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான சூரியன், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு மேலும் உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொண்டர்களின் பலம் அதிகரிக்கும். ஆறாம் அதிபதியான செவ்வாயும் டிச.6 வரை ஆறாம் இடத்திலேயே ஆட்சி பெறுவதும், டிச.6 முதல் புத ஆதித்ய யோகம் உண்டாவதும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பொன், பொருள், வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டி, தொல்லை விலகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். நோய் நொடி மாறும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கையில் பணம் புரளும். நவ.27 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களின் சிறப்பு வெளிப்படும். எடுத்த வேலை வெற்றியாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திட்டமிட்ட வேலை நடந்தேறும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: நவ. 27

அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 23, 30. டிச. 3, 5, 12, 14

பரிகாரம் சிவனை வழிபட புதிய முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !