துலாம் : கார்த்திகை ராசி பலன்
சித்திரை 3, 4 ம் பாதம்
தன்னை நம்பியவரை பாதுகாத்திடும் வலிமை கொண்ட உங்களுக்கு கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியும், தைரிய வீரிய காரகனுமான செவ்வாய் தன ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடிகள் விலகும். பேச்சில் தெளிவு இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட மந்தநிலை மாறும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். டிச.6 முதல் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகளை நீக்குவார். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். இந்த நேரத்தில் மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் அவருடன் யோக, போகக்காரகன் ராகுவும் சஞ்சரிப்பதால் பூர்வீகச் சொத்தில் அல்லது குடும்பத்திற்குள் பிரச்னைகளை உண்டாக்கும். பிள்ளைகளை எண்ணி மனம் சங்கடப்படும். வரவிற்கு மீறிய செலவு ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றமும் வரவும் இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: டிச.3
அதிர்ஷ்ட நாள்: நவ.18, 24, 27, டிச. 6, 9, 15
பரிகாரம் மாசாணி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.
சுவாதி
அதிர்ஷ்டத்தை நோக்கி நடை போடும் உங்களுக்கு கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். யோக போகக்காரகன் ராகு, கர்மக்காரகன் சனியுடன் இணைந்து 5 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நன்மையை உண்டாக்கும். புதிய இடம், வீடு வாங்கும் போது மூலப் பத்திரங்களில் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளின் நடவடிக்கையைக் கவனிப்பதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் இந்த நேரத்தில் அவசியம். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள், உறவுகளுக்குள் சண்டை சச்சரவு வரலாம். சிலருக்கு இந்த நேரத்தில் பெற்றோரும் எதிராக மாறுவர். உங்கள் திட்டங்களில் மாற்றம் உண்டாகும். வியாபாரம், தொழிலில் ஈடுபட்டிருப்போர் ஒவ்வொரு வேலையையும் தாமே செய்து முடிக்க வேண்டியதாக இருக்கும். உடல்நிலையிலும் அவ்வப்போது பிரச்னை தலையெடுக்கும். மாதம் முழுவதும் உங்கள் ராசியாதிபதி சாதகமாக சஞ்சரிப்பதால் கையில் பணப்புழக்கம் இருக்கும். வரவேண்டிய பணம் வரும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பாக்யாதிபதி புதனும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். உங்கள் லாபாதிபதி சூரியன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பேச்சால் வளம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கமிஷன் ஏஜண்ட், தரகர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். மனக்குழப்பத்திற்கு இடம் தராமல் எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: டிச.4.
அதிர்ஷ்ட நாள்: நவ. 22, 24, டிச. 6, 13, 15.
பரிகாரம் பகவதி அம்மனை வழிபட முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்
பிறருக்கு நல்லதைச் சொல்லி வழி நடத்தும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். தனக்காரகன் குரு அவர் சஞ்சரிக்கும் ராசியில் வக்கிரம் அடையும் போது முன் ராசியின் பலன்களை அளிப்பார் என்பதால் ஜீவன ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்துள்ள குருவால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மேலதிகாரியின் ஆதரவும், எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வும் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பொன், பொருள் சேரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ப லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி தேடி வரும். ஐந்தாம் இடத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிப்பதால் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வது அவசியம். சிலர் தவறான வழியில் செல்லக் கூடும் என்பதால் கண்காணிப்பில் வைத்துக்கொள்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் தனாதிபதி செவ்வாய் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். சிலர் புதிய வாகனம், ஆடை ஆபரணம் வாங்குவர். குடும்பத்தினரின் தேவை நிறைவேறும். விவசாயம் செழிப்படையும். பணியாளர்களுக்கு தேவை பூர்த்தியாகும். பெண்களுக்கு கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: டிச. 5
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 24, 30. டிச. 3, 6, 12, 15
பரிகாரம் சுப்ரமணியரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.